திமுக, அதிமுக புறக்கணித்திருப்பது புதிய நட்புக்கான முடிவாக இருக்கலாம்! ராஜ்மோகன்

Wait 5 sec.

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் திமுக, அதிமுக கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாநில நலனில் அக்கறையின்மையை காட்டுகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது கிடையாது. ஆரம்பம் முதலே நாங்கள் தொகுதி மறுவரையறையை எதிர்த்து வருகிறோம். இது மாநில பிரச்னை. மாநில உரிமைக்கான பிரச்னையில் அவர்கள் கலந்துகொள்ள மறுப்பது என்பது முறையன்று. மாநில உரிமைகள் மீதான அவர்களின் அக்கறையின்மையை இது வெளிப்படுத்துகிறது. காவிரி விவகாரத்தை யாரும் திசைதிருப்ப முடியாது. அதற்காக இந்த கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற கூட்டங்கள் நடந்துள்ளன. திமுக காவிரி விவகாரத்தை காண்பித்து சுயநல அரசியல் செய்கின்றனர். எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணித்திருப்பது அவர்களின் சொந்த முடிவாக இருக்கலாம். அவர்களின் புதிய நண்பர்களுக்கான சுயமுடிவாக இருக்கலாம். இன்று நடப்பதும் அனைத்துக் கட்சி கூட்டம்தானே? அவர்கள் ஏன் வரவில்லை. அல்லது நேற்று சட்டப்பேரவையிலேயே ஒரு சிறப்புத் தீர்மானம் வேண்டும் என்று கேட்டிருக்கலாமே" என்றார். Rajmohan comments on the DMK and AIADMK have boycotted all party MPS meetingயுபிஐ கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்! நயினார் நாகேந்திரன்