மரடோனாவின் கடவுளின் கை: உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஏலம்! விலை ரூ. 95 கோடியா?

Wait 5 sec.

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் உலகப் புகழ்பெற்ற ’கடவுளின் கை’ கோல் அடிக்கப் பயன்படுத்தப்பட்ட கால்பந்து ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. 1986-ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆர்ஜென்டீனா அணி வென்றது. அந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணியின் வீரரும், கால்பந்து உலகின் ஜாம்பவானுமான மரடோனா அடித்த இரு கோல்கள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றது. அதில், ’கடவுளின் கை’ என்னும் சர்ச்சையான வரலாற்றுச் சிறப்புமிக்க கோலை அடிக்கப் பயன்படுத்தப்பட்ட கால்பந்து அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஏலத்தில் 10 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 95 கோடி) விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் 1986-ல் நடைபெற்ற உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில், மரடோனா பந்தை கையால் தட்டி அவரைவிட உயரமான இங்கிலாந்து கோல்கீப்பரைத் தாண்டி கோல் அடித்தார். அதே போட்டியில், மைதானத்தின் நடுவிலிருந்து இங்கிலாந்து தடுப்பாட்ட வீரர்கள் பலரையும் தாண்டி அதிவேகமாக பந்தைக் கடத்திச் சென்று 2-வது கோலையும் அடித்தார் மரடோனா. அது, ’நூற்றாண்டின் சிறந்த கோல்’ எனக் கூறப்படுகிறது. இப்போட்டியில் ஆர்ஜென்டீனா 2-1 என்ற கணக்கில் வென்றது.போட்டி முடிந்த பின்னர், செய்தியாளர்கள் சர்ச்சைக்குரிய கோல் பற்றி கேட்டபோது, "கொஞ்சம் மரடோனாவின் தலையாலும், கொஞ்சம் கடவுளின் கையாலும் அடிக்கப்பட்டது” என்று மரடோனா கூறினார். அந்தத் தொடரில் ஆர்ஜென்டீனா உலகக்கோப்பை வென்றது. இந்த நிலையில், டெக்சாஸில் உள்ள 'ஹெரிடேஜ் ஏல நிறுவனம்', ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறவுள்ள ஏலத்தில், 2.5 மில்லியன் டாலர் ஆரம்ப விலையில் (ரூ. 23 கோடி) விற்பனைக்கு வைக்கவுள்ளது. இந்தப் பந்து 10 மில்லியன் டாலர் (ரூ. 95 கோடி) அல்லது அதற்கு மேல் வரை விற்பனையாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.குறிப்பிட்ட போட்டியில் மரடோனா அணிந்திருந்த ஜெர்சி தற்போது உலகின் மிக விலையுயர்ந்த கால்பந்து சட்டையாக 9.3 மில்லியன் டாலருக்கு (ரூ. 88 கோடி) விற்பனையாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. The football used by legend Maradona to score his world-famous 'Hand of God' goal has come up for auction.நீண்டநாள் காதலியைக் கரம்பிடித்தார் ரமன்தீப் சிங்!