கண் விழித்ததும் செல்போன் பார்ப்பது வெறும் பழக்கமல்ல! உளவியல் பார்வையில்..

Wait 5 sec.

காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரை செல்போன் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள், உறங்கும்போது கைக்கு அருகே செல்போன் இருக்கும். தூக்கத்திலிருந்து எழுந்து கண் திறந்ததும் முதலில் விழிப்பது வாட்ஸ்ஆப்பில்தான்.சிலர், செய்திகளை அலசலாம், சிலரோ வானிலை எப்படியிருக்கும் என்று பார்க்கலாம், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் சிலரது விருப்பமாக இருக்கலாம், இன்ஸ்டா ஸ்டோரிகளில்தான் ஆர்வம் இருக்கலாம் சிலருக்கு. எது எப்படியாக இருந்தாலும் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்பே செல்போனில் அப்டேட் பார்த்து விடுகிறார்கள்.இது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இருக்கும் பழக்கம்தானே என்று சாதாரணமாக நாம் சொன்னாலும் உளவியல் ரீதியாகப் பார்த்தால் அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது சற்று சிக்கலானதாகவே இருக்கிறது.இதிலென்ன தவறு என்று கேட்டால்? இருக்கிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்காலையில் எழுந்தவுடன் முதலில் செல்போனை எடுப்பதற்கு, வெறும் சுயக்கட்டுப்பாடு இன்மை மட்டுமல்லையாம். நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றாமை, நிச்சயமற்ற சூழலின் தாக்கம், மற்றவர்கள் மீதான கவன ஈர்ப்பு அல்லது தனக்கு கிடைக்கும் பாராட்டுகள் போன்றவற்றின் மீதான தாக்கமும் காரணம் என்கிறார்கள்.இதில், நிச்சயமற்ற சூழல் என்பது எங்கே வந்தது என்று கேட்கலாம்.பதிலாகக் கிடைப்பது, ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கும்போதும் ​​உலகம் இயங்கிக்கொண்டுதானிருக்கும். அவர் அனுப்பிய தகவல்களை நண்பர்கள் படித்து பதிலளித்திருக்கலாம், ஏதேனும் முக்கிய செய்திகள் வெளியாகியிருக்கலாம், பணி அல்லது படிப்பு தொடர்பான மின்னஞ்சல்கள் வந்திருக்கலாம். இது பற்றி ஒரு குழப்பமான மனநிலையிலிருந்து வெளியேற்ற ஒருவரை மூளை உடனடியாக செல்போனைப் பார்க்க வேண்டும் என்று தூண்டுகிறது. நிச்சயமற்ற சூழலில் இருந்து எதுவும் நடக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டேயிருக்கிறது.ஆனால், முன்பெல்லாம் சில விஷயங்களை அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள முடிவுகளுக்காக பல நாள்கள் காத்திருப்போம். அப்போது மூளை அதற்கேற்ப பக்குவப்பட்டிருக்கும். இன்றோ அவசர யுகம். அவசர யுவன், யுவதிகள். ஒரு தேவையும் இல்லாமல், ஒரு அவசரமும் இல்லாமல், எந்த செய்தியும் வரப்போதில்லை என்று தெரிந்தும் ஒருவர் தன்னுடைய செல்போனை எடுத்து ஏதாவது வந்திருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறார் என்றால் அது எந்தவிதமான பழக்கமாக இருக்கலாம்? அதுவும் அது ஒரு முக்கியமான நாளாக இருக்கலாம், முக்கிய தேர்வோ, சந்திப்போ, நேர்காணலோகூட இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமாக செல்போனை பார்ப்பது முக்கியத்துவம் பெறுவது எந்த வகையில்?மக்கள் ஒரு நிதானமான மனநிலையில் இல்லாமல், ஏதோ ஒரு பதற்றம், நிச்சயமற்ற உணர்வு போன்றவற்றுடன் இருக்கும்போதுதான் அதிகம் செல்போனில் தேடுகிறார்கள். உண்மையில் மனிதர்களுக்குத் தெரியும், நம் செல்போனில் அவ்வளவு முக்கியமான தகவல் வினாடிக்கு வினாடி வந்து கொண்டேயிருக்கப்போவதில்லை. ஆனால், வினாடிக்கு வினாடி அதை ஆராய்வதும் எழுந்ததும் செல்போனைப் பார்ப்பது ஏன் என்பதற்கு ஒரு காரணமும் கூற முடியாது.. ஏனென்றால் பழகிப்போனது.உளவியலாளர்கள் இன்னொன்றும் சொல்கிறார்கள், செல்போனைப் பார்த்து அதில் எந்த புதிய தகவலும் இல்லை என்பது, நிச்சயமற்ற உணர்விலிருந்து விடுபடுவதாக மூளை நம்புகிறதாம்.அதுபோல ஒரு நாள் நல்ல செய்தியோ முக்கிய செய்தியோ வரலாம்தான். ஆனால் அதனை வைத்து எல்லா நாளும் செல்போனைத் தேடி நேரத்தை செலவிடுவது தேவையற்றது. மீண்டும் மீண்டும் செய்வதும் பயனற்றது. ஆனால் பயனுள்ளது என மூளை நம்ப வைக்கிறது. இதுவும் எழுந்ததும் செல்போன் பார்க்க உதவுபுரிகிறதாம்.மேலும் அவ்வாறு எடுத்த செல்போனை எப்போது வைக்கிறீர்கள், எத்தனை மணி நேரம் செலவிடுகிறீர்கள் என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தாலே என்ன தவறு என்பது புரிந்துவிடும். நிறுத்திவிடலாம்.காரணமேயின்றி மீண்டும் மீண்டும் செய்யும்போது அது பாழாய்போன பழக்கமாகிப்போகிறது. ஆனால் எத்தனையோ செய்ய வேண்டிய அரிய செயல்கள் இருக்கின்றன. அதனைப் பழக்கப்படுத்தத்தான் பாழாய் போன மனிதனால் முடியாமல் போகிறது. அதற்கும் காரணம் அந்த செல்போன்தான்.எனவே, இதையெல்லாம் நன்குணர்ந்து, மனிதர்கள் இனி கண் விழிக்கும்போது செல்போன் பார்ப்பதை தவிர்க்கலாம். காலை நேரம் என்பது நமக்கு மிக வலிமையான சூழல்களை உருவாக்கும். அந்த நேரத்தை செல்போனில் மூழ்கி வீணாக்கி, முதுகை கூணாக்காதீர். Checking mobile phone the moment you wake up is not just a habit—from a psychological perspective...வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்றால்... ஆர்பிஐ அறிவுறுத்தல்!