பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.வளைகுடா நாடுகளிடையே கடுமையான போர் நடைபெற்று வரும் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப், துணைப் பிரதமர் இஷாக் தார் மற்றும் அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் திடீரென நேற்று (ஆக. 7) சௌதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தில், சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் உடன் பாகிஸ்தானிய தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வார்கள் எனக் கூறப்பட்டது. ஏற்கெனவே, சௌதி மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான ராணுவ ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. செங்கடல் பகுதியில் சௌதியின் கப்பல்கள் மீது ஈரானுக்கு ஆதரவான யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானிய தலைவர்கள் பயணம் மேற்கொண்டது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில், துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு இன்று வருகை தந்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் சௌதி தலைவர்களைச் சந்தித்த அவர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்துடன், ஜெட்டாவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் ஆசியாவின் மூன்று முக்கிய நாடுகள் இடையே கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.ஏற்கெனவே, அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில், துருக்கி மற்றும் சௌதி அரேபியாவில் உள்ள நகரங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலி! தாத்தா-பாட்டியையும் கொன்ற கொலையாளி!A trilateral defense agreement is expected to be signed between Pakistan, Saudi Arabia, and Turkey.