மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!

Wait 5 sec.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 77.21 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 நாள்களில் 4.19 அடி உயர்ந்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வந்த மழை தனிந்து வருவதால் கபினிக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,264 கன அடியிலிருந்து வினாடிக்கு 18, 875 கனஅடியாக சரிந்துள்ளது.வியாழக்கிழமை மாலை 76.18 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 77.21 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 39.23 டிஎம்சியாக உள்ளது. கடந்த மூன்று நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4.19 அடி உயர்ந்துள்ளது.Regarding the current water level status of Mettur Dam...பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு!