ஏர் இந்தியா விமானம் குலுங்கிய விவகாரம்: போதைப்பொருள் சோதனையில் சிக்கினாரா விமானி?

Wait 5 sec.

தாய்லாந்திலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம் குலுங்கிய விவகாரத்தில் விமானி போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தாய்லாந்தின் புகேட் நகரில் இருந்து கடந்த ஆக. 4 ஆம் தேதி 137 பயணிகள், 8 விமானப் பணிக்குழுவினருடன் இந்தியாவுக்கு வந்த ஏர் இந்தியாவின் ஏர்பஸ் ஏ320 நியோ ரக விமானம் சுமார் 300 அடி உயரத்திலிருந்து திடீரென நடுவானில் காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக திடீரென குலுங்கி, அதன்பின்னர் தில்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் பலத்த காயமடைந்தனர்.புகேட் - தில்லி இடையிலான இந்த விமானச் சேவை, இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூலை மாதத்தின் நடுப்பகுதி வரை இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதத்தில் நேரிட்டிருப்பது, காலநிலை மாறுபாடு தீவிரமாகியிருப்பதை உணர்த்துவதாக உள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தச் சம்பவம் பூதகரமாக வெடித்த நிலையில், சம்பவத்திற்குப் பிறகு இரண்டு விமானிகளுக்கும் கட்டாய மனோவியல் பரிசோதனை நடத்தப்பட்டது. முதல்கட்ட சோதனையில், ‘எதிர்மறையற்றது - not negative’ என்று வந்துள்ளதாகவும், இதனால் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சம்பவத்தில் விமானி போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.இதற்கிடையில், ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் பொறுப்பு மேலாளரான கேம்ப்பெல் வில்சனை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.The pilot-in-command of an Air India flight from Phuket to Delhi that experienced a sudden loss of altitude last week has tested positive for drugs