இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான ரீல்ஸ் விடியோக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான விடியோக்கள் மட்டும் அடிக்கடி வருகிறதா? அதனை சரி செய்துகொள்வதற்கான வழிமுறையை இன்ஸ்டாகிராம் வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட விடியோவை பார்த்தாலோ, லைக் செய்தாலோ அல்லது கமென்ட் செய்தாலோ தொடர்ந்து அதே மாதிரியான விடியோக்களையே பரிந்துரை செய்யும். பொதுவெளிகளில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும்போது பலருக்கு இது சங்கடமான சூழலையே ஏற்படுத்தும். இதனை இன்ஸ்டாகிராமில் ஒருசில வழிமுறைகளை பின்பற்றி மாற்றிக்கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புரொபைல் பகுதிக்குச் சென்றால் வலது மூலையில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்ய வேண்டும். இப்போது கன்டென்ட் பிரிபெரென்சஸ் (Content prederences) என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். வாட் யூ சி (What you see) என்ற பகுதியில் இந்த ஆப்ஷன் இருக்கும். இதில் சென்சிடிவ் கன்டென்ட், பொலிட்டிக்கல் கன்டென்ட் என இரு வகைகள் இருக்கும். அதற்கு கீழே ரீசெட் சஜெஸ்டட் கன்டென்ட் (Reset Suggest content) என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்து உறுதிப்படுத்த வேண்டும். இதனைச் செய்த பிறகு பரிந்துரை செய்யப்படும் விடியோக்களின் வகை படிப்படியாக மாறும். பின்னர் பயனர்கள் பார்க்கும், விரும்பும் விடியோக்களுக்கு ஏற்ப புதிய அல்காரிதம் செயல்படும். ஒருமுறை ரீசெட் செய்துவிட்டால் பழைய கன்டென்ட் விடியோக்கள் மீண்டும் பரிந்துரை பட்டியலில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.வாட்ஸ்ஆப்பில் 'கெஸ்ட் மோட்'!... செயலி இல்லாதவர்களுடனும் இனி உரையாடலாம்!How to change 18+ Reels video algorithm on Instagram?