அமித் ஷா நாளை தமிழகம் வருகை! திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

Wait 5 sec.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஆக. 8) தமிழ்நாட்டுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஆக. 8 மற்றும் ஆக. 9 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில், தமிழ்நாட்டின் சில முக்கிய கோயில்களில் அவர் வழிபாடு செய்யவுள்ளார். இதன்படி, நாளை அமித் ஷா திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷா திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், வரும் ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி செல்லும் அமைச்சர் அமித் ஷா அங்கு காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. மேலும், புதுச்சேரியில் “ஹர் கர் திரங்கா” பேரணியையும் அவர் துவங்கிவைக்கவுள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு! குற்றவாளிகள் உருவாக்கிய பிஃபா உலகக் கோப்பை 2026 வாட்ஸ்ஆப் குரூப்! Home Minister Amit Shah will visit Tamil Nadu tomorrow (August 8).