ஐடிஐ படித்தவர்களுக்கு ஜப்பானில் வேலை: அமைச்சர் பர்வேஸ் தகவல்!

Wait 5 sec.

தமிழகத்தில் ஐடிஐ கல்வி நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பெற்ற பட்டதாரிகளை வேலை வாய்ப்புக்காக ஜப்பான் நாட்டிற்கு அனுப்பி வைக்கும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கையெழுத்தானது.தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்த திட்டம் பற்றி தெரிவித்தார்.தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் முகமது பர்வேஸ், தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு சர்வதேச வகையில் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பல்வேறு முன்னோடி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தின் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெளிநாடுகளில் தொழில் பயிற்சி பெறும் வகையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜப்பான் நிறுவனத்துடன் கையொப்பம் ஆகியுள்ளது.தமிழ்நாட்டில் தற்பொழுது 132 அரசு தொழில் பயிற்சி நிலையங்களும் 277 தனியார் தொழில் பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.அரசுத் தொழில் பயிற்சி நிலையங்களில் பாரம்பரிய தொழில் பிரிவுகளான பிட்டர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், வெல்டர், கணினி உள்ளிட்ட தொழில் பிரிவுகளிலும் தொழில் தரத்திலான அட்வான்ஸ்ட் சிஎன்சி ரோபாட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெகிகிள் போன்ற நவீன தொழில் பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகின்றது.2026 ஆம் கல்வி ஆண்டில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒதுக்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 80 சதவீத இருக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள.நேரடி சேர்க்கை 31.8. 26 வரை நடைபெறும். கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 95 சதவீத மாணவர்கள் உள்நாட்டு முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தபட்டனர்.முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சர்வதேச அளவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்திட வேண்டி, முதல் கட்டமாக தமிழ்நாட்டின் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ஆட்டோமொபைல் துறைக்கான தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளித்து ஆட்டோமொபைல் சர்வீஸ் ஜப்பான் நாட்டில் உள்ள எகிமே நிசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அமைத்து தர வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் எகிமே நிசான் நிறுவனம் ஆகியவரால் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இதன்படி பயிற்சி பெறும் தொழிற்பயிற்சி பட்டதாரிகளுக்கு ஆறு மாத கால ஜப்பானிய மொழிப்பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை எகிமெ நிசான் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஜப்பான் செல்வதற்கு, மொழிப் பயிற்சி செலவுகள், ஆவணத் தயாரிப்பு உதவி, மருத்துவ பரிசோதனை கட்டணங்கள் மற்றும் விசா கட்டணங்கள் ஆகியவை அனைத்தும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என குறிப்பிட்டார். Jobs in Japan for ITI graduates: Minister Parvesh shares details