இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்புவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியிலும், ஆகஸ்ட் 23-ல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இலங்கை லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடி வெற்றி பெற்றது.இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.இலங்கை அணி விவரம் தனஞ்சய டி சில்வா (கேப்டன்), லஹிரு உதார, நிஷான் மதுஷ்கா, கமிந்து மெண்டிஸ் (துணை கேப்டன்), தினேஷ் சண்டிமால், பசிந்து சூரியபண்டார, சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் கீப்பர்), ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, கேஷர நுவந்த, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷ்வா பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கஇந்திய அணி விவரம்ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (கீப்பர்), துருவ் ஜூரல் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின்முன்னதாக சாய் சுதர்சன் அணியில் இடம்பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக அவர் விலகியதால், சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.First Test against India - Sri Lanka squad announced!இலங்கை டெஸ்ட் தொடர்: சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்ப்பு!