போதைப்பொருள் கடத்தல் வழக்கு: 3 மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

Wait 5 sec.

என்ஐஏ அதிகாரிகள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வகையில், மதுரை அவனியாபுரம் ஜெயபாரத் சிட்டி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெருங்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வீட்டில் என்ஏஐ ஆய்வாளர் ஆகாஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. பாலமுருகன் என்பவர் மதுரையில் இல்லாத நிலையில் அவர் மணிப்பூரில் தொழில் நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. அவரது மனைவி முருகேஸ்வரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமான வழக்கில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் மதுரையில் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆக. 16 முதல் கர்நாடக மக்கள் மாளிகை திறப்பு... என்னென்ன தடை?