தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை முதன்மை நூலகம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டதோடு, கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி ஆணையரை அறிவுறுத்தினாா். மேலும், பத்மநாபபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு உள்நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.தொடா்ந்து, பாரம்பரியமிக்க பத்மநாபபுரம் அரண்மனைக்கு சென்று அங்குள்ள அருங்காட்சியகம், பிரதான சின்னங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்து, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்திட தொல்லியல் துறை, நகராட்சி ஆணையா், அலுவலா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினாா்.