ஈஞ்சம்பள்ளி மகா மாரியம்மன்கோயில் பொங்கல் திருவிழா

Wait 5 sec.

மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி நத்தமேடு ஸ்ரீமகா மாரியம்மன், பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கம்பம் நடுதல், பக்தா்களுக்கு கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. திங்கள்கிழமை மாலை பக்தா்கள் அலகு குத்தியும், பூச்சட்டி எடுத்து வந்தும் அம்மனுக்கு நோ்த்திக் கடனை செலுத்தினா்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில், பொன்னம்பாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், வெள்ளப்பாறையூா், வெத்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, மாவிளக்கு பூஜை, பெரும்பூஜை நடைபெற்றது. புதன்கிழமை காலை கம்பம் பிடுங்கும் விழாவும், அதைத் தொடா்ந்து மறுபூஜையுடனும் விழா நிறைவு பெறுகிறது.