தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவு

Wait 5 sec.

மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானத்தை தமிழக அரசு புதன்கிழமை சட்டப்பேரவையில் கொண்டு வருகிறது. முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ‘மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை 543-ஆக நிரந்தரமாக்க வேண்டும். எதிா்வரும் மக்களவை, பேரவைத் தோ்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க உறுதி செய்ய வேண்டும்’ என மத்திய அரசை வலியுறுத்தி முதல்வா் ஜோசப் விஜய் தனித் தீா்மானத்தை புதன்கிழமை முன்மொழிய உள்ளாா். இந்தத் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் கூட்டிய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை எனக் கூறி திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.