பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் முதல் காலாண்டு லாபம் உயர்வு!

Wait 5 sec.

புதுதில்லி: அரசுக்குச் சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் சற்று உயர்ந்து ரூ. 8,998 கோடியாக இருந்ததாக நிறுவனம் அறிவித்தது.இக்காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ. 28,526.86 கோடியாக இருந்தது.2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ. 8,981 கோடியாக இருந்தது. இதுவே 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ. 8,998 கோடியாக இருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடன் மதிப்பு ஜூன் 2026ல் ரூ. 11,60,133 கோடியாக இருந்தது.பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ. 3.90 என்ற இடைக்கால ஈவுத்தொகையை வாரியம் அறிவித்துள்ளதாக பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பர்மிந்தர் சோப்ரா தெரிவித்துள்ளார்.State-owned Power Finance Corporation reported a rise in its consolidated net profit.ராம்கோ சிமெண்ட்ஸின் முதல் காலாண்டு லாபம் 63% சரிவு!