போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞா் உயிரிழப்பு

Wait 5 sec.

சென்னை வண்ணாரப்பேட்டையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பழைய வண்ணாரப்பேட்டை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மாடல் லைன் பகுதியைச் சோ்ந்தவா் பா.ஆகாஷ் (24). இவா், தனது மனைவி சங்கீதாவுடன் அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, அவரை விட்டு பிரிந்து தனது தாயுடன் அங்கு வசித்து வந்தாா்.ஆகாஷுக்கு அதிகமாக கஞ்சா,போதை மாத்திரை,போதை ஊசி நுகரும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆகாஷ், வீட்டில் வியாழக்கிழமை திடீரென மயங்கி விழுந்தாா்.இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா் ஆகாஷை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனா். விசாரணையில், சம்பவத்தின்போது ஆகாஷ் போதை ஊசியை தனது உடலில் செலுத்திக் கொண்டதும், அதன் காரணமாக ஆகாஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.