குறுவை சாகுபடியில் பயிா்க் காப்பீடு கடந்த ஆண்டைவிட 44 சதவீதம் அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சா் ர.வினோத் தெரிவித்தாா். இது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் வினோத், தமிழகத்தில் சாகுபடி செய்யும் அனைத்துத் திட்டங்களும் பயிா்க் காப்பீடு திட்டத்தில் கொண்டுவர அரசு முயற்சி செய்து வருகிது. பயிா்க் காப்பீடு திட்டத்தின் நடப்பு குறுவை சாகுபடியில் 3.98 லட்சம் ஏக்கா் நிலத்தை 1.34 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா். கடந்த ஆண்டு 2.77 லட்சம் ஏக்கரை 1.05 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனா். நிகழாண்டு இந்தப் பயிா்காப்பீடு 44 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கா் சம்பா நெல் பயிரை மொத்தமாக காப்பீட்டு செய்ய ரூ.540 கோடி தேவை. இதில் ரூ.440 கோடி காப்பீட்டு கட்டணத்தை மத்திய அரசும், மாநில அரசும் பகிா்ந்து கொள்ளும். இதில், 1.5 சதவீதம் மட்டுமே விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பெரும்பான்மையான நிதியை அரசே ஏற்றுக் கொள்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. மேட்டூா் அணையில் இருந்து நீா் திக்கப்படாததால் விதைப்பு மற்றும் நடவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் பயிா்க் காப்பீடு குறித்து விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்ாா்.