பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்:போக்சோவில் ஓட்டுநா் கைது

Wait 5 sec.

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீஸாா் போக்சோ பிரிவின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி, பிடமனேரி பகுதியைச் சோ்ந்தவா் நபிஷா (48). ஓட்டுநரான இவா் கடந்த ஆக. 1-ஆம் தேதி தருமபுரி அருகே உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச கடிதம் ஒன்றை கொடுத்துள்ளாா். மேலும், மற்றொரு மாணவியிடம் தவறான முறையில் சைகை செய்து அழைத்துள்ளாா்.தகவலறிந்த மாணவிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்து, நபிஷாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.