மகாராஷ்டிரத்தில் உள்ள குருத்வாராவுக்குள் ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மகாராஷ்டிரத்தில் மிகவும் பிரபலமான நான்டெட்டில் உள்ள ஹசூர் சாஹிப் குருத்வாராவுக்கு இன்று காலை 11 மணியளவில் சுக்பீர் சிங் பாதல் சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்து ஒருவர் சுக்பீர் சிங் பாதலை கத்தியால் குத்தியுள்ளார். இதில், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவத்தில் சுக்பீர் சிங் பாதலின் சிறப்புப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்து, சுக்பீர் சிங் பாதலை பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.குருத்வாராவில் கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த டிசம்பர் 2024-ல், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு வெளியே சுக்பீர் சிங் பாதல் மீது பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில், நூலிழையில் அவர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.Sukhbir Singh Badal stabbed inside Gurdwara in Maharastraநாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி