பங்குச்சந்தை: சென்செக்ஸ் உயர்வுடனும் நிஃப்டி சரிவுடனும் நிறைவு! (ஆக. 13)

Wait 5 sec.

தொடர்ந்து 2 நாள் சரிவுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று (ஆக. 13) சற்று உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளது. ஆனால், நிஃப்டி50 குறியீடு சற்று சரிந்து முடிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,111.91 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 113.61 (0.15%) புள்ளிகள் உயர்ந்து 78,079.96 புள்ளிகளில் நிலை பெற்றது.ஆனால் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 40.10 (0.16%) புள்ளிகள் குறைந்து 24,395.85 புள்ளிகளில் நிறைவு பெற்றது.நிஃப்டி50 குறியீட்டில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக சரிவைச் சந்தித்தன.நிஃப்டி மிட்கேப் மாற்று ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.15, 0.27 சதவீதம் உயர்ந்தன. சென்செக்ஸ் 30 பங்குகளில் இண்டிகோ, என்டிபிசி, பெல், எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ், ட்ரெண்ட், பஜாஜ் பைனான்ஸ், எம்&எம், பாரதி ஏர்டெல் எட்டர்னல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பின்சர்வ், சன் பார்மா, ஐடிசி, கோடக் வங்கி, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் லாபம் பெற்றன. துறைசார் குறியீடுகளில், நிஃப்டி உலோகக் குறியீடு 1% வரை சரிந்தது. நிஃப்டி ஆட்டோ, எப்எம்சிஜி, ஐடி, மீடியா பங்குகள் மட்டும் உயர்ந்த நிலையில் மற்ற அனைத்துத் துறைகளும் சரிந்தன. ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால் பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 87.46 டாலராக உள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.44 ஆக முடிந்தது. Stock Market: Sensex snaps 2-day declining streak Nifty settles at 24,3963-ம் நாளாக தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (ஆக. 13)