திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்: பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்!

Wait 5 sec.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஐயாறப்பர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில், பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில் உள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில், திருவையாறு திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமானதாகவும், நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.ஆடிப்பூரத் திருவிழா பத்து நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல், இந்தாண்டு கடந்த ஆக. 5ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த விழாவினை முன்னிட்டு, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது‌. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(ஆக. 13) நடைபெற்றது. அறம் வளர்த்த நாயகி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள, பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழத்துனர். ராஜ வீதிகளில் உலா வந்த அறம் வளர்த்த நாயகியை, ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.During the temple car procession held to mark Aadi Pooram at the 2,000-year-old Aiyappar Temple, women alone pulled the chariot and worshipped the deity.இது தெரியுமா? சிவப்பு வண்ணத்தைக் கண்டால் காளைகள் முட்ட வருவது ஏன்?