அழகே அழகு தொடரை இயக்கிவரும் இயக்குநர் பிரவீன் பென்னட் புதிய தொடர் ஒன்றை இயக்கவுள்ளார். சிறகடிக்க ஆசை, கனா கண்டேனடி, செந்தூர பூவே ஆகிய வெற்றித் தொடர்களுக்கு கதை எழுதிய குரு சம்பத்குமார் இத்தொடருக்கும் கதை எழுதவுள்ளார். குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் இத்தொடரை தயாரிக்கவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில், திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு அழகே அழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. செல்லம்மா தொடரில் நடித்த அன்ஷிதா, தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்த நக்ஷத்ரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அன்ஷிதாவுக்கு ஜோடியாக குணா குமரன், நக்ஷத்திராவுக்கு ஜோடியாக பிரேம் ஜேக்கப் நடிக்கின்றனர். இவர் நீ நான் காதல் தொடரில் நாயகனாக நடித்திருந்தார். பழமைவாதம் நிறைந்த வீட்டில் அனைத்தையும் சகித்துக்கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யும் மூத்த மருமகள், அதே வீட்டில் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என நினைத்து வேலைக்குச் செல்லத் துடிக்கும் இளைய மருமகள் என இருவரை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. நாடகத்தன்மை இல்லாமல் மிகவும் தத்ரூபமாக நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருவதால், பல ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக அழகே அழகு தொடர் உள்ளது. இத்தொடரை இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி, மகாநதி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி ஆகிய வெற்றித் தொடர்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ரெசாட் என்ற இணையத் தொடர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.அழகே அழகு தொடருக்கு மத்தியில் தற்போது மீண்டும் ஒரு தொடரை பிரவீன் இயக்கவுள்ளார். இத்தொடருக்கு குரு சம்பத்குமார் கதை எழுதவுள்ளார். இவர் சிறகடிக்க ஆசை, கனா கண்டேனடி போன்ற இயல்பான தொடர்களின் கதையை எழுதியவர். தற்போது இவர்கள் இருவரும் இணையவுள்ளதால், மீண்டும் ஒரு எதார்த்தமான கதையை நெடுந்தொடராக எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.நான் நடிகையாவேன் என நினைக்கவில்லை! எதிர்நீச்சல் பார்வதி நெகிழ்ச்சி!