மத்தியப் பிரதேசத்தில் மின்சாரம் பாய்ந்து பசு பலியானதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்மாற்றியை சரமாரியாகத் தாக்கும் விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பசுமாடு கால்நடை வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, இந்து வழிபாட்டில் புனித தெய்வமாகவும் போற்றப்படுகிறது. வட இந்தியர்கள் பசு வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பல குடும்பங்களுக்கு பசு வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில், மின்மாற்றியிலிருந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த மின்சாரம் பாய்ந்ததால் பசுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் கோபத்தைத் தூண்டியது. A cow got electrocuted and died, so what did the locals do? They actually started hitting the transformerAunty National Transformer pic.twitter.com/p3KxElINAO— Rock (@Rock4754) August 13, 2026மின் கட்டமைப்பினால் ஏற்பட்ட அலட்சியத்தின் காரணமாக, மின்மாற்றியில் மின் கசிவு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் உள்ள மின்மாற்றி மற்றும் மின் கம்பங்களைச் சரமாரியாக அடித்துச் சேதப்படுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிலைமை மோசமடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் திரண்டனர். சட்ட அமலாக்க அதிகாரிகள் மக்களை அமைதிப்படுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.சேதமடைந்த மின்மாற்றியைச் சரிசெய்து தருவதாகவும், பசுவின் உரிமையாளருக்கு ஏற்பட்ட இழப்பிற்கு இழப்பீடு வழங்குவதாகவும் மின்சாரத் துறை நிறுவனம் உறுதியளித்தது. இதையடுத்து, அங்கிருந்த மக்கள் கலைந்து சென்றனர். In an Indian village, a cow was killed by a powerful electric shock from a transformer. டிஜிட்டல் கைது: சிபிஐ பெயரில் முன்னாள் நீதிபதியிடம் ரூ. 2.50 கோடி மோசடி!