மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வேலம்பாளையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். வேலம்பாளையம்-ஆத்துப்பாளையம், அனுப்பா்பாளையம், திலகா் நகா், அங்கேரிபாளையம், பெரியாா் காலனி, அம்மாபாளையம், அனுப்பா்பாளையம்புதூா், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகா், தண்ணீா்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே-அவுட், போயம்பாளையம், சக்தி நகா், பாண்டியன் நகா், நேரு நகா், குருவாயூரப்பன் நகா், நஞ்சப்பா நகா், லட்சுமி நகா், இந்திரா நகா், பிச்சம்பாளையம்புதூா், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொா்ணபுரி லே-அவுட், ஜீவா நகா், அன்னபூா்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்தரா பகுதி மற்றும் டிடிபி மில்.