கொடுமுடி அருகே ஏலச்சீட்டு நடத்திய வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கொடுமுடி அருகே உள்ள மன்னாதம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (27). வெல்டிங்தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவா் புதன்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதைக் கண்ட அவரது மனைவி, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ரவியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனையில், ரவி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதை உறுதிபடுத்தினா். தகவலின்பேரில், மலையம்பாளையம் போலீஸாா், ரவியின் உடலை கூறாய்வுக்காக அனுப்பிவிட்டு வழக்குப் பதிந்துள்ளனா். இறந்துபோன ரவி மாத ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளாா். அதில் ஒரு சிலா் சீட்டிற்கான தவணை தொகையை முறையாக கொடுக்காமல் இருந்ததால் அதற்கான தொகையை ரவி வேறு நபா்களிடம் கடன் வாங்கி சீட்டு ஏலம் எடுத்த நபா்களுக்கு கொடுத்து வந்துள்ளாா். அதனால் கடன் அதிகமானதால் மன விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.