எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.ராமேசுவரத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க புதன்கிழமையில் கடலுக்குள் சென்றனர்.இந்த நிலையில், கச்சத்தீவு - தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர்.இதனைத் தொடர்ந்து, எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.மேலும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து நீடித்து வரும்நிலையில், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதனிடையே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் விஜய், ஆக. 6 ஆம் தேதியில் கடிதமும் எழுதினார். இருப்பினும், தமிழக மீனவர்கள் கைது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ. 60 கோடி நில மோசடி: துணை ஆட்சியர் சஸ்பெண்ட்Sri Lankan Navy arrests 9 Tamil Nadu fishermen