சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எஸ். வேலங்குடியில் கோயில் திருவிழாவையொட்டி, வட மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.எஸ். வேலங்குடி பிடாரியம்மன் கோயில் ஆடிப் பொங்கலையொட்டி நடைபெற்ற வட மஞ்சுவிரட்டுப் போட்டியில் 17 காளைகள் பங்கேற்றன. காளைக்கு 9 மாடுபிடி வீரா்கள் வீதம் 153 வீரா்கள் களமிறங்கினா். ஒரு காளைக்கு 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் ஒரு சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் வெற்றி பெற்றன. மாடுபிடி வீரா்களுக்கும், மாட்டின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், சில்வா் அண்டா, தென்னங்கன்றுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதற்கான ஏற்பாடுகளை வேலங்குடி கிராமத்தினா், இளைஞா்கள் செய்தனா்.