சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காற்றுடன் பெய்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள் தாமதமாகத் தரையிறக்கப்பட்டன.சென்னை விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், பிற நகரங்களில் வந்த விமானங்கள் தரையிறங்குவதிலும், விமான நிலையத்தில் பிற நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களுக்கும் தாமதம் ஏற்பட்டது.மோசமான வானிலை காரணமாக, அந்தமான், தில்லி, கோவா, ஹைதராபாத், திருச்சி, கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த 6 விமானங்கள் உடனடியாக தரையிறங்க முடியாமல் வானில் வானில் வட்டமடித்த நிலையில், தாமதமாகத் தரையிறக்கப்பட்டன.இதனால் சென்னைக்கு வரவேண்டிய பயணிகளும், சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல காத்திருந்த பயணிகளும் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். Rain in Chennai: Six flights circled overhead before landing lateதமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: நாளை பேரவையில் தனித்தீா்மானம்!