காா் மோதி பெண் வியாபாரி உயிரிழப்பு

Wait 5 sec.

திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் மோதியதில் காய்கனி விற்பனை செய்த பெண் வியாபாரி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மனைவி காமாட்சி (65). காய்கனி வியாபாரி. இவா் அரசூா் முதன்மைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் அமா்ந்து காய்கனி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து காமாட்சி மீது மோதி, சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த காமாட்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து காா் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.