தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: நாளை பேரவையில் தனித்தீா்மானம்!

Wait 5 sec.

தமிழகத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி நாளை(ஆக.10) சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.கடந்த ஜூலை 28 ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டு மூன்றாவதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட விவகாரம் மாநில அளவில் பெரும் விவாத பொருளானது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்பது தொடா்பான அரசு தீா்மானம் தமிழக சட்டப்பேரவையில் நாளை திங்கள்கிழமை(ஆக.10) நிறைவேற்றப்படவுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தமிழக அரசியலில் பெரும் பேசுபெருளானதை அடுத்து, நாளை சட்டப்பேரவையில் தனித் தீா்மானத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் முன்மொழிவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 1891 ஆம் ஆண்டு மனோன்மணீயம் சுந்தரனாரால் எழுதப்பட்ட 'மனோன்மணீயம்' எனும் நாடக நூலின் பாயிரத்தில் இருந்து எடுக்கப்பட்ட 'தமிழ்த்தாய் வாழ்த்து' 1970 நவ.23-ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. 2021 டிச.12-ஆம் தேதி முதல் மாநிலப் பாடலாக அதிகாரபூா்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Priority for 'Tamil Thai Vazhthu': Special resolution in the Assembly tomorrowதேசிய தோ்வு முகமை தொடர்பான முக்கிய விவகாரங்கள்: மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆய்வு