தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி திடலில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் விளையாடின.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லிஸ் முதலில் விளையாடியது.அதிரடியில் மிரட்டிய ஆஷிக்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 206 ரன்கள் இலக்கு!முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கே.ஆஷிக் 56 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து 2 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார். அவரைத் தொடர்ந்து, அஸ்வந்த் வல்தாபா 28* ரன்கள், கேப்டன் என்.ஜெகதீசன் 27 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.திருப்பூர் அணி சார்பில் ஆர்.சிலம்பரசன் மற்றும் எஸ்.மோகன் பிரசாத் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நடராஜன், சாய் கிஷோர் மற்றும் இசக்கி முத்து தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.துஷார் ரஹேஜா சதம் விளாசல்; திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி!206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா சதம் விளாசி அசத்தினார். அவர் 52 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரதோஷ் ரஞ்சன் பால் 41 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அமித் ஷத்விக் 19 ரன்கள் எடுத்தார்.சேப்பாக் சூப்பர் கில்லிஸ் தரப்பில் விக்னேஷ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.In the Tamil Nadu Premier League cricket tournament, the iDream Tiruppur Tamizhans team secured a magnificent 7-wicket victory in the match against Chepauk Super Gillies.ஓய்வை அறிவித்ததில் வருத்தம் இல்லை; பயிற்சியாளராக விரும்பும் அஜிங்க்யா ரஹானே!