'அவர் போலி அதிகாரின்னு எப்படிக் கண்டுபிடிச்சே?''எந்தத் துறையில் வேலை பார்க்கிறீங்கன்னு கேட்டேன்... அவர் அதற்கு 'மயிலாடுதுறை' ன்னு சொன்னார்!''உங்க கடையில ஸ்பெஷல் பரோட்டான்னு போட்டு இருக்கீங்களே... அதற்கும் சாதா பரோட்டாக்கும் என்ன வித்தியாசம்?' 'ஒரு நாள் வித்தியாசம், சார்!''குழாயில் தண்ணி வரலைன்னு எப்படிக் கண்டுபிடிச்சே?''பால்காரன்கிட்ட அதிகமா பால் கேட்டேன்... இல்லைன்னு சொல்லிட்டான்.''டாக்டர், எந்த புக்கை எடுத்தாலும் தூக்கமாக வருது.' 'பேஸ்புக்கை எடுத்துப் பாருங்களேன்...''நீங்க ஏன் உங்க கட்சிக்கு பட்டாம்பூச்சி அப்படின்னு பெயர் வச்சிருக்கீங்க?' 'கரப்பான் பூச்சி இருக்கும்போது பட்டாம்பூச்சி இருக்கக் கூடாதா?'-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.