சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதால் எந்தவொரு அழுத்தமும் இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. விரைவில் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரவுள்ள நிலையில், அணிகள் பலவும் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன.இந்த நிலையில், சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதால் எந்தவொரு அழுத்தமும் இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடர் சொந்த மண்ணில் நடைபெறவுள்ளது என்பதால் எங்களுக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை. சொந்த மண்ணில் விளையாடுவதை அழுத்தம் என்பதை விட சுதந்திரமாக விளையாடவுள்ளோம் என்றே கூற வேண்டும் என்றார்.கடந்த சில ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணி அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.South African player Kagiso Rabada has stated that there is no pressure whatsoever in playing the World Cup tournament on home soil.சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் புதிய சாதனை!