சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் பரிந்துரைத்தது. இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவா், பரிந்துரைக்கப்பட்ட 19 பேரில் 15 பேரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டாா்.அதன்படி, என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமாா், ஆா்.ஆா்.விவேகானந்தன், எஸ்.ரவிக்குமாா், என்.திலீப்குமாா், எ.மனோகரன், கே.கோவிந்தராஜன், ரஜனீஷ் பத்தியால் ஆகிய 8 வழக்குரைஞா்களும், மாவட்ட நீதிபதிகளான பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகா், எஸ்.காா்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 7 பேரும் என மொத்தம் 15 போ் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75-ஆக உள்ள நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள 15 நீதிபதிகளுடன் சோ்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 66-ஆக உயா்ந்துள்ளது. அதேசமயம் காலியிடங்களின் எண்ணிக்கை 9-ஆக குறைந்துள்ளது.முன்னதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், 15 நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.15 newly appointed judges took the oath of office at the Madras High Court on Sunday.நாட்டாமை குடும்பம் எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்- ஆதரவாளர்களுக்கு சரத்குமார் அறிவுறுத்தல்