ஏப்ரல் மாதம் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் குலைந்தது ஏன்? - ப. சிதம்பரம்

Wait 5 sec.

2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கூறியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து விவாதிப்பதற்காக தவெக அரசு ஏற்பாடு செய்த தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் அரசு சார்பில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார், தலைமைச் செயலர் மு.சாய்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படடது. வருத்தமளித்ததுஇதுதொடர்பாக ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கூறியுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது.வாய்ப்பை இழந்துவிட்டோம் தொகுதி மறுவரை பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம் ஒற்றுமை குலைந்தது ஏன்?2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும் தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். Why did the unity forged in April crumble in August?13 நாள்களாகியும் பதிலளிக்காத மோடி, அமித் ஷா: ராகுல் காந்தி