இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்கிற சாதனையை 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' தனதாக்கியுள்ளது. டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இத்திரைப்படம், உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு நாளைக்கு முன்பாக ஜூலை 30ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. இப்படத்தில் மீண்டும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட்டும், மிஷெல் ஜோன்ஸ்-வாட்சன் கதாபாத்திரத்தில் ஜெண்டயாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜேக்கப் பாட்டலோன், க்ரோண்டன் மற்றும் சாடி சின்க் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸின் 38-வது திரைப்படமான இப்படத்தை கெவின் ஃப்கி மற்றும் அமி பாஸ்கல் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 462 கோடி வசூல் செய்துள்ளது. ஜூலை 17ஆம் தேதி வெளியாகி ரூ. 189 கோடி வசூலித்த கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' மற்றும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த 'அப்செஷன்' ஆகிய படங்களை இப்படம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படமாக 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' உருவெடுத்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு இப்படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுளளது. "Spider-Man: Brand New Day", featuring actors Tom Holland and Zendaya, has earned over Rs 400 crore in India at the box office, emerging as the highest-grossing Hollywood film.வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் 'ருத்ரா' தோற்றம் வெளியீடு!