நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.இந்தப் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி ஆகியோரும் நடிகர்கள் யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்தாலும் இன்னும் வெளியீட்டைக் காணாமல் இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ. 50 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் குடும்பமாக அதிகளவில் பார்க்கப்படும் என்பதால் பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. டாக்ஸிக் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்! கால அளவு இவ்வளவா?Information has emerged regarding the OTT rights for the film Mookuthi Amman 2, starring actress Nayanthara.