மாணவர்கள் முடிவுகள் எடுக்கும்போது தேசிய நலனை மையமாகக் கொண்டும், தங்கள் செயல்பாடுகள் நாட்டிற்கு எவ்வாறு பயனளிக்கும் மற்றும் நாட்டின் தேவைகளை நிறைவேற்றும் என்று தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நேர்ந்திர மோடி வலியுறுத்தினார்.தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 57-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகம் வேகமாக மாறி வருகிறது. உலகளாவிய அதிகாரச் சமநிலையும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றம் நிகழும்போதெல்லாம் சாவல்களும் எழுகின்றன. அதே நேரத்தில், மாறி வரும் இந்த உலகம் தொழில்நுட்பத்தையும், புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரும். இதில் யார் தொடர்ந்து கற்றுக்கொள்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். ஒவ்வொரு தலைமுறையும் அந்தந்த காலத்திற்கேற்ற சவால்களை எதிர்கொள்வதாகவும், அதற்கேற்ற தேசியப் பொறுப்பைக் கொண்டிருப்பதாகவும், புதிய சூழல்களையும் சவால்களையும் ஏற்றுக்கொள்பவர்கள்தான் அந்த சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவார்கள். இதைத்தான் தில்லி ஐஐடியில் நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். மாணவர்கள் முடிவுகள் எடுக்கும்போது தேசிய நலனை மையமாகக் கொண்டும், தங்கள் செயல்பாடுகள் நாட்டிற்கு எவ்வாறு பயனளிக்கும் மற்றும் நாட்டின் தேவைகளை நிறைவேற்றும் என்று தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.பட்டம் பெறும் மாணவர்கள் அடுத்த 30 முதல் 35 ஆண்டுகளில் மேற்கொள்ளும் பணிகள், வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மோடி கூறினார்.நாட்டில் புதிய துறைகள் உருவாகி வருவதாகவும், அவை இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குவதாகவும், செமிகண்டக்டர், விண்வெளி மற்றும் ட்ரோன்கள் போன்ற துறைகளைச் சுட்டிக்காட்டிய அவர், அனைத்துத் துறைகளிலும் இந்தியா தன்னிறைவு அடைவதை நோக்கிச் செயல்பட்டு வருவதாகவும், இந்தத் தன்னிறைவு நோக்கிய பயணம் 'வளர்ந்த இந்தியா' என்ற கனவை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளமாக அமையும் என்று மோடி கூறினார்.சமூக ஊடகக் காலத்தில் கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்கள் குறித்தி பேசிய மோடி, சம்பளத் தொகுப்புகள், வேலைகள் அல்லது தாங்கள் பணிபுரியும் துறைகளின் அடிப்படையில் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.வாழ்க்கை என்பது ஒரு தரவரிசைப் பட்டியல் அல்ல என்றும், ஒருவரின் பயணம் என்பது மற்றவர்களுடனான போட்டி அல்ல, மாறாகத் தங்களுக்குள்ளேயே நிகழும் போட்டி. வாழ்க்கையில் ஆர்வத்தை புதுப்பித்துக்கொள்ளுங்கள். தங்களுக்கான உந்துதலை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டு முந்தைய நாளை விடச் சிறந்தவர்களாக மாறுவதற்கு ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, இளைஞர்கள் எவ்வளவு வலிமையானவர்களோ அந்தயளவுக்கு நாடும் வலிமையானதாக இருக்கும் என்றார். தில்லி ஐஐடியில் இருந்து எண்ணற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் உருவாகி உள்ளனர். ஒரு கல்வி நிறுவனமே இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடியுமென்றால், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் அந்த மாபெரும் சக்தியை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள் என மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் கல்விச் சூழலை மாணவர்-மையமாகவும், ஆராய்ச்சி சார்ந்ததாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்றியுள்ளது என்று கூறினார். மேலும், நாட்டின் கல்வி வளாகங்கள் வெறும் பட்டதாரிகளை மட்டுமல்லாமல், புதுமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தேசத்தை உருவாக்குபவர்களையும் உருவாக்கும் திறன் கொண்டவை என்ற புதிய நம்பிக்கையை இந்திய நிறுவனங்களிடம் பிரதமர் ஏற்படுத்தியுள்ளார் என்று அவர் கூறினார்.Prime Minister Narendra Modi today urged the students of the Indian Institute of Technology (IIT) Delhi to keep the national interest at the centre of their decisions and ask themselves how their actions can benefit the country and address its needs.‘உலக சாம்பியனுக்கே இந்த நிலைமையா’... உலகக் கோப்பை நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்!