இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்!

Wait 5 sec.

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தியுள்ளார்.இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.பிரதான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் லெவன் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.முதல் இன்னிங்ஸில் இலங்கை லெவன் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரவிந்து ரசந்தா 71 ரன்களும், நிஷான் மதுஷ்கா 66 ரன்களும் எடுத்தனர்.இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.தேவ்தத் படிக்கல் சதம்!363 ரன்கள் எடுத்து இலங்கை அணி டிக்ளேர் செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தினார். அவர் 121 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா 63 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்களும் எடுத்தனர்.இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.Devdutt Padikkal impressed by smashing a century in the warm-up match against Sri Lanka.இந்திய அணிக்குப் பின்னடைவு... இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!