நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்கு இரு நாள்களுக்கு முன்பு, கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்த அமித் ஷா எழுந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகோய் இன்று (ஆக. 13) விமர்சித்தார். தில்லியில் செய்தியாளர்களுடன் கெளரவ் கோகோய் பேசியதாவது:''15 நாள்களாகக் காணாமல் போயிருந்த உள்துறை அமைச்சர், கூட்டத்தொடர் முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தனது கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, விவாதத்திற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார். உண்மையான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? அனைவரும் தங்கள் கருத்துகளை ஏற்கனவே தெரிவித்துவிட்ட நிலையில், உங்கள் அறிக்கையை அளிப்பதற்கான நேரம் மட்டுமே எஞ்சியிருந்தது.ஆனால், அவர்கள் அறிக்கை அளிப்பதைத் தவிர்த்துவிட்டு, மீண்டும் மீண்டும் கூடுதல் விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இது நாடாளுமன்றத்துக்கு வராமல் இருப்பதற்கும், தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதற்கும் ஒரு சாக்குப்போக்காகவே அமைந்தது. இறுதியாக, மக்களவை ஒத்திவைக்கப்படும் தருணத்தில், அவைத்தலைவரின் உரையைக் கூடக் கேட்காமலேயே பிரதமரும் உள்துறை அமைச்சரும் அங்கு வந்து தோன்றினர்.நாங்கள் பல கூட்டத்தொடர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஆளும் அரசாங்கம் இவ்வளவு தூரம் அச்சத்திற்கு உள்ளான ஒரு கூட்டத்தொடரை இதற்கு முன் நாங்கள் பார்த்ததில்லை. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவையின் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விலகி, அதில் பங்கேற்காமலே இருந்த ஒரு கூட்டத்தொடரை நாங்கள் காண்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம்'' எனக் குறிப்பிட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தோல்விக்கு காரணம் ராகுல் காந்தி: பாஜகKumbhakaran-like sleep Congress MP Gaurav Gogoi targets Amit Shah, alleges absence from Parliament