கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் மிகவும் பிரபலமான நான்டெட்டில் உள்ள ஹசூர் சாஹிப் குருத்வாராவுக்கு இன்று (ஆக. 13) பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வரும், ஷிரோமணி அகாலி தல் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் சென்றார். அப்போது, அங்கிருந்து நபர் ஒருவர் சுக்பீர் சிங் பாதலை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதில், அவருக்கும், அவரது சிறப்புப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருக்கும் படுகாயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீதான தாக்குதலுக்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த சுக்பீர் சிங் பாதலின் உடல்நிலை குறித்து அவரது மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதலிடம் செல்போன் மூலம் பிரதமர் மோடி உரையாடி நலம் விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுக்பீர் சிங் பாதலிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் செல்போன் மூலம் பேசி நலம் விசாரித்துள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் மீதான தாக்குதல் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. ஜனநாயகத்தில், கொள்கை வேறுபாடுகள் காரணமாக நிகழும் எந்தவொரு வன்முறையும் அனைத்து வகையிலும் கண்டிக்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்! PM Modi has inquired about the health of former Punjab DCM Sukhbir Singh Badal, who was injured in a stabbing attack.