சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!

Wait 5 sec.

சென்னையில் சொத்துவரி மாற்றியமைப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் அறிவித்துள்ளார். நடைமுறையில் இருந்த அளவுக்கே அதாவது, மாற்றியமைப்பதற்கு முன்பு இருந்த தொகையே வசூலிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். சொத்துவரி திருத்திய மதிப்பீடு தொடர்பாக மக்கள் எழுப்பிய கோரிக்கைகளை ஆய்வு செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறைவான மதிப்பீடு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கு மட்டும் வரி மதிப்பீட்டை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து சென்னை மாநகராட்சி மீது குற்றம் சாட்டப்பட்டது. வரி மாற்றியமைப்பு குறித்து மக்களிடன் கருத்து கேட்கப்பட்டது, அந்த கருத்துகளின் அடிப்படையில் தற்போது சொத்துவரி மாற்றியமைப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.Property tax hike put on hold in Chennai!