சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் இன்று (ஆக. 13) அறிவித்துள்ளார். இதன்மூலம், நடைமுறையில் இருந்த அளவுக்கே அதாவது, மாற்றியமைப்பதற்கு முன்பு இருந்த தொகையே மக்களிடம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொத்துவரி திருத்திய மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் விடுத்த கோரிக்கைகளை ஆய்வு செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான மதிப்பீடு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கு மட்டும் வரி மதிப்பீட்டை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து சென்னை மாநகராட்சி மீது குற்றம் சாட்டப்பட்டது. வரி மாற்றியமைப்பு குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் அந்த கருத்துகளின் அடிப்படையில் தற்போது சொத்துவரி மாற்றியமைப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம்! நாளை காலை புறப்படும்!Property tax hike put on hold in Chennai!