ஓடிடியில் 10 கோடி நிமிடங்கள்! நூறு சாமி படத்துக்கு வரவேற்பு!

Wait 5 sec.

ஓடிடி தளத்தில் நூறுசாமி திரைப்படம், குறைந்த நேரத்தில் 10 கோடி நிமிட பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, இயக்குநர் சசியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நூறு சாமி. நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திக்‌ஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.கணவனை இழந்த பெண்ணுக்கு அவரது மகன் மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதும், அதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் கதைக்களமாகக் கொண்ட இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில், நூறு சாமி படம் கடந்த வாரம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி 10 கோடி நிமிட பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக ஜீ5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.The movie Noorusamy has set a record by surpassing 10 crore minutes of watch time in a short period.ஓடிடியில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய டாப் 10 படங்கள்!