ஏர்டெல் கொடுத்த அதிர்ச்சி ரூ.299 பிளான் இனி இல்லை! அது மட்டுமா?

Wait 5 sec.

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.299 பிளானை ஏர்டெல் நிறுவனம் நீக்கியிருக்கிறது. இது டேட்டா அதிகம் கொடுக்கும் ரூ.349 பிளான் மூலம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், திடீரென அதன் மாதந்திர திட்டங்களை அதுவும் அதிகமானோர் பயன்படுத்தும் குறைந்தபட்ச மாதந்திர திட்டத்தினை மாற்றியமைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.பாரதி ஏர்டெல் நிறுவனம், நாடு முழுவதும் ரூ. 299, ரூ. 579, ரூ. 619 மற்றும் ரூ. 649 ஆகிய நான்கு ப்ரீபெய்ட் (prepaid) திட்டங்களை நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அதிகமானோர் பயன்படுத்தி வந்த ரூ. 299-க்கு இருந்த திட்டம் ரூ. 349-க்கான திட்டமாக மாற்றப்பட்டுள்ளதுதான்.அதாவது, 299 கட்டணத்தில் இருந்த பிளான், விலை கிட்டத்தட்ட 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 28 நாள்கள் செல்லுபடியாகும் 299 பிளானில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா கிடைத்து வந்தது. ஆனால், ரூ.349 திட்டத்தில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை உயர்த்தி, கட்டண கட்டமைப்பை சீர்படுத்தும் வகையில் ஏர்டெல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Airtel's shocker: The Rs. 299 plan is no more! And that's not all.