யுபிஎஸ்சி: தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்!

Wait 5 sec.

தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்கள் தொடர்பான அதிகாரங்கள் மற்றும் பணிகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.நிர்வாக அதிகாரங்கள் மற்றும் பணிகள்ஆலோசனை அதிகாரங்கள் மற்றும் பணிகள்பகுதியளவிலான நீதித்துறை அதிகாரங்கள் மற்றும் பணிகள்தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட தொகுதிகள் மறுவரையறைச் சட்டத்தின் (Delimitation Commission Act) அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயித்தல்.தேர்தல் வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்து, அவற்றை அவ்வப்போது திருத்தம் செய்து, தகுதியுடைய அனைத்து வாக்காளர்களையும் பதிவு செய்தல்.தேர்தல் நடைபெறும் தேதிகள் மற்றும் கால அட்டவணையை அறிவித்தல் மற்றும் வேட்புமனுக்களைப் பரிசீலித்தல்.அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அவற்றிற்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்குதல்.அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் தேர்தல் சின்னங்களை ஒதுக்குதல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நீதிமன்றமாகச் செயல்படுதல். 6. தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான பிரச்னைகளை விசாரிப்பதற்காக அதிகாரிகளை நியமித்தல்.7. தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகளை (Code of Conduct) நிர்ணயித்தல்.8. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்துவதற்கான ஒளிபரப்பு நேர அட்டவணையை தயாரித்தல்.9. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரங்களில் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குதல்.10. மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரங்களில் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குதல்.11. தேர்தல் முறைகேடு, வாக்குச்சாவடி கைப்பற்றுதல், வன்முறை போன்ற சம்பவங்கள் மற்றும் பிற முறைகேடுகள் ஏற்பட்டால் தேர்தலை ரத்து செய்தல்.12. தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்காக குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தல்.13. நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களுக்கான தேர்தல் நிர்வாக அமைப்பைக் கண்காணித்து, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்தல்.14. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது, ஓராண்டுக்குப் பிறகும் அவசரநிலை காலத்தை நீட்டிப்பதற்காக தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குதல்.15. தேர்தல் நோக்கத்திற்காக அரசியல் கட்சிகளைப் பதிவு செய்தல் மற்றும் அவற்றின் தேர்தல் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றுக்கு தேசியக் கட்சி அல்லது மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை வழங்குதல்.Regarding the powers and functions of the Election Commission...யுபிஎஸ்சி: முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்!