தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:''தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், மயிலாடுதுறை, நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தருமபுரி, திருச்சி, நாமக்கல், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, தேனி மற்றும் கோவை மலையையொட்டியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!Weather update Rain in 17 districts until 10 PM!