இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி தெரிவித்துள்ளார்.இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே திடலில் நடைபெறுகிறது.இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து பிரதான வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக உள்ளூர் போட்டிகளில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகிப் நபி மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், ஒரு கிரிகெட் வீரரின் மனநிலை தொடர்ச்சியாக கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்க வேண்டும். இந்திய அணியில் விளையாடுவதற்காக எனக்கு ஒரு நாள் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியும். பல ஆண்டுகளாக கடின உழைப்பைக் கொடுத்து சிறப்பாக செயல்படும்போது, அதற்கான பலன் கண்டிப்பாக இருக்கும்.இந்திய அணியில் என்னுடைய பெயர் இடம்பெற்றது எனக்கு மகிழ்ச்சியளித்தது. என்னுடைய குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நான் இந்திய அணிக்காக விளையாடுவதைக் காட்டிலும் அவர்களுக்கு வேறு பெரிய சந்தோஷம் இருக்க முடியாது என்றார்.Fast bowler Aaqib Nabi has stated that he was confident he would get the opportunity to play for the Indian team.டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா துருவ் ஜுரெல்?