கன்னியாகுமரியிலிருந்து அஸ்ஸாம் செல்லும் ரயில் இன்று ரத்து

Wait 5 sec.

கன்னியாகுமரி நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 11) அஸ்ஸாம் மாநிலம் திப்ருகா் நிலையம் செல்லும் விவேக் விரைவு ரயில் மற்றும் மறுமாா்க்கத்தில் இயக்கும் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரியிலிருந்து வரும் 11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.25 மணிக்குப் புறப்பட்டு திப்ருகா் நிலையம் (அஸ்ஸாம்) செல்லும் விவேக் விரைவு ரயில் (எண்: 22503) ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 7-ஆம் தேதி திப்ருகா் நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வரவேண்டிய விவேக் விரைவு இணை ரயில் ரத்து (எண்: 22504) செய்யப்பட்டதால் தற்போது கன்னியாகுமரியிலிருந்து செல்லும் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.