திருமலை தேவஸ்தானத்தின் இணைச் செயல் அதிகாரியாக கோபிநாத் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.திருமலை தேவஸ்தானத்தின் புதிய இணைச் செயல் அதிகாரியாக (மருத்துவம் மற்றும் கல்வி) நியமிக்கப்பட்டுள்ள கோபிநாத், திருமலை ஏழுமலையான் கோவிலில் பொறுப்பேற்றாா்.பின்னா், அவா் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தாா். கோவில் அதிகாரிகள் அவருக்கு தீா்த்த பிரசாதத்தை வழங்கினா். இந்நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் பிரதி செயல் அதிகாரி திரு லோகநாதம், வாரியப் பிரிவு பிரதிச் செயல் அதிகாரி பிரசாந்தி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.